‘தர்பார்’ விமானம்

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி, அந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான ’கபாலி’ படத்தின் விளம்பரம் விமானத்தில் செய்யப்பட்டதுபோல ‘தர்பார்’ படத்துக்கும் விமானத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது.

‘தர்பார்’ படத்தின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ள விமானங்கள் இன்று (ஜனவரி 2) முதல் விண்ணில் பறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தர்பார் படத்தின் பதாகைகள் விமானத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் ரஜினி படத்திற்கு மட்டுமே இதுவரை விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!