'தர்பார்' விமானம்

'தர்பார்' விமானம்

1 mins read
43edb129-9ec9-41e3-8769-f8482942cb88
'தர்பார்' விளம்பரப் பதாகைகளைத் தாங்கிய விமானங்கள் இன்று (ஜனவரி 2) முதல் விண்ணில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஊடகம் -

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி, அந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான 'கபாலி' படத்தின் விளம்பரம் விமானத்தில் செய்யப்பட்டதுபோல 'தர்பார்' படத்துக்கும் விமானத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது.

'தர்பார்' படத்தின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ள விமானங்கள் இன்று (ஜனவரி 2) முதல் விண்ணில் பறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தர்பார் படத்தின் பதாகைகள் விமானத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் ரஜினி படத்திற்கு மட்டுமே இதுவரை விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்