சின்னத்திரை தொகுப்பாளர் நாயகனாக நடித்துள்ள படம் 'சாரல்'

சின்னத்திரை தொகுப்பாளர் நாயகனாக நடித்துள்ள படம் 'சாரல்'

1 mins read
39396555-a53b-4b92-b439-4e33518693ef
சின்னத்திரை தொகுப்பாளர் அஸார் நாயகனாக நடிக்கும் படம் 'சாரல்'. அவருடன் இணைந்து ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். படம்: ஊடகம் -

சின்னத்திரை தொகுப்பாளர் அஸார் நாயகனாக நடிக்கும் படம் 'சாரல்'. அவருடன் இணைந்து ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். வில்லனின் மூன்றாவது அடியாள் வேடத்தில் பவர் ஸ்டார் நடிக்கும் இப்படத்துக்கு, இஷான் தேவ் இசையமைத்துள்ளார். "வில்லன் கூட்டத்தில் தாம் முதல் நிலை அடியாளாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறார் பவர் ஸ்டார். அவரது ஆர்வக்கோளாற்றால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக விவரித்துள்ளோம். நாயகன் அஸாரின் நண்பர்களாக 'காதல்' சுகுமார், கோவை பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பேருந்துப் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார் கோவை பாபு. நாயகன் அஸாரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்," என்கிறார் இயக்குநர் டி.ஆர்.எல்.