‘அசுரன்’ படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி உள்ளார்.
நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ‘அசுரன்’.
இந்நிலையில் இப்படத்தை தெலுங்கிலும் மறுபதிப்பு செய்கின்றனர். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரேயா, அனுஷ்கா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பிரியாமணி ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து வருகிறார்.