ஒரு படத்தில் பணத்துக்காக மட்டுமே தாம் நடிப்பதில்லை என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ஒரு படத்துக்காக நாம் எவ்வளவு உழைத்தோம், அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம் என்றும் கூறுகிறார்.
“வெற்றி எப்போதும் உற்சாகத்தைக் கொடுக்கும். அதற்காக வெற்றி அடைந்த படங்களை ஒரு மாதிரியும், தோல்வி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் என்னால் பார்க்க முடியாது. எனக்கு இரண்டுமே சமம்தான்.
“அதே சமயம் ஒரு படத்துக்கான பலன் கிடைக்கவில்லை என்றால் நம் உழைப்பு வீணாகி விட்டதே என்ற வருத்தம் இருக்கும். ஆனாலும் அதில் கற்றுக்கொண்ட விஷயங்களை நினைவுபடுத்தி மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்,” என்கிறார் ராஷ்மிகா.
ஊதியத்தைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கலாம் என்று குறிப்பிடுபவர், ஒரு படத்தின் தோல்வி கதாநாயகர்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போன்று கதாநாயகிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.