நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடியவர். உடற்பயிற்சி செய்வது, சுற்றுலா செல்வது என அனைத்து படங்களையும் காணொளிகளையும் ‘இன்ஸ்டகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்வார். ஆனால் தற்பொழுது அதுபோல் வெளியிடுவது இல்லை என்று கூறப்படுகிறது.
உடை விஷயத்தில் சமந்தாவிற்கு, அவருடைய மாமனார் வீட்டில் ஏகப்பட்ட கெடுபிடி என்று அவ்வப்போது தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்திருக்கின்றன.
நட்சத்திர தம்பதிகளான சமந்தா - நாகசைதன்யா ஜோடி முக்கியமான பண்டிகை நாட்களை வெளியூரில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் புத்தாண்டைக் கொண்டாட கோவாவிற்கு சென்றுள்ளனர்.
சமந்தா சில தினங்களுக்கு முன்பே தனது நண்பர்களுடன் கோவா சென்றுவிட, நாகசைதன்யா மறுநாள் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐந்து நாட்கள் புத்தாண்டை கோவாவில் கொண்டாடிவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.
ஆனால் இம்முறை சமந்தாவோ, நாகசைதன்யாவோ ஒரு புகைப்படத்தை கூட இன்ஸ்டகிராமில் பதிவிடவில்லை. புத்தாண்டு வாழ்த்துக்கூட பதிவிடவில்லை. இதனால் அவர்களுடைய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தற்போது நாகசைதன்யா சேகர் கம்முலா இயக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்திலும் ‘த பேமிலி மேன்-2’ இணையத் தொடரில் சமந்தாவும் நடித்து வருகிறார்கள்.