தற்போது விஜய்சேதுபதி கைவசம் பல படங்கள் உள்ளன. அதில் ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘க/பெ ரணசிங்கம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. தற்போது தெலுங்குப் படம், இந்திப் படம், விஜய்யின்
‘மாஸ்டர்’ என அடுத்தடுத்த படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். அவர் நடிக்க உள்ள ‘துக்ளக் தர்பார்’ அரசியல் கதை அமைப்புடன் தயாராக உள்ளதாம். இப்படத்தை டெல்லி பிரசாத் தீன தயாளன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன் இருவருமே அரசியல்வாதிகளாக நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. அப்போது தன்னைப் பார்க்க வந்த ரசிகர் ஒருவரின் பிறந்தநாள் என்று அறிந்ததும் கேக் வரவழைத்து அவருக்கு கேக் வெட்டி, ஊட்டிய காணொளி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.