தமிழ், மலையாளம், தெலுங்கு திரைகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் ரம்யா நம்பீசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இவர் பயணித்து வருகிறார். ரம்யா தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
‘தமிழரசன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட ரம்யா நம்பீசனை படக்குழுவினர் சரியாகக் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
விழா மேடைக்கு வெகு தூரத்தில் பின் வரிசையில் ரம்யா நம்பீசன் அமர வைக்கப்பட்டாராம். மேலும் மேடைக்கு அழைக்கும் பட்டியலில் அவருடைய பெயர் இறுதியாக இருந்ததாம். இதை அவர் தனக்கு நேர்ந்த அவமதிப்பாக கருதி விழாவில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்து
விட்டார். இனி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.