மருத்துவக் கழிவுகள் குறித்து அலசும் படம் - 'கல்தா'

மருத்துவக் கழிவுகள் குறித்து அலசும் படம் - 'கல்தா'

1 mins read
601c3b47-db88-4a1b-bff6-762139d07fc4
ஆன்டணி, சிவ நிஷாந்த் நடிப்பில் உருவாகி உள்ளது 'கல்தா'. படம்: ஊடகம் -

ஹரி உத்ரா இயக்கத்தில் ஆன்டணி, சிவ நிஷாந்த் நடிப்பில் உருவாகி உள்ளது 'கல்தா'. ஜெய் கிருஷ் இசையில் வைரமுத்து, வித்யாசாகர் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். மருத்துவக் கழிவுகளால் தங்களையும் அறியாமல் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துமாம் இப்படம். "கல்தா என்பது வழக்கமாக நாம் கையாளும் சொல்லாடல்தான். அரசியல்வாதிகள் மக்களுக்குத் தொடர்ந்து கல்தா கொடுக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துத் திரைக்கதை அமைத்துள்ளோம்," என்கிறார் இயக்குநர்.