தனது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகை ராதிகா.
இதற்கான முதற்கட்ட பணிகளை அவர் தொடங்கிவிட்டதாகத் தகவல். இதில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்க விரும்புகிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 375 படங்களில் நடித்துள்ளார் ராதிகா. கடந்த 43 ஆண்டுகளாக நடித்து வரும் இவரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.