இந்தி நடிகை தீபிகா படுகோனே ஒற்றைக்கண் அடித்து வெளியான காணொளிப் பதிவு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதைக் கண்டு தாம் கவிழ்ந்து போனதாகக் கூறியுள்ளார் நடிகை பிரியா வாரியர்.
‘ஒரு அடார் லவ்’ மலையாளப் படத்தில் இவர் கண்ணடித்து நடித்த காட்சி வெகு பிரபலம். இதையடுத்து பிரபலங்கள் பலரும் பிரியாவைப் போலவே கண்ணடித்து காணொளி வெளியிட்டனர்.
இந்நிலையில் அமில வீச்சு தாக்குதலுக்குள்ளான பெண்ணாக ‘சாபாக்’ இந்தி படத்தில் நடிக்கிறார் தீபிகா. இதன் படப்பிடிப்பின்போது அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணு க்கான முக ஒப்பனையுடன் தன் அருகிலிருந்த இயக்குநரை நோக்கி கண்ணடித்தார் தீபிகா. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா.
“உண்மையிலேயே அந்த தேவதை (தீபிகா) தான் இப்படி கண்ணடித்தாரா? அவரது கண்ணடிப்பில் நான் கவிழ்ந்துவிட்டேன்,” என்று பிரியா குறிப்பிட்டுள்ளார்.