தனது வறுமைச் சூழ்நிலை, குடும்பத்தின் நிலை குறித்து மாணவி ஒருவர் பேசியதைக் கேட்ட சூர்யா விழா மேடையில் கண்கலங்கினார். மாணவியின் பேச்சு அனைவரையும் சோகப்பட வைத்தது.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சூர்யா, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய மாணவி ஒருவர், அகரம் அறக்கட்டளை தனக்கு செய்த உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும், தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையும், இருநூறு ரூபாய்க்கா தன் தாயார் இன்றளவும் மற்றொரு வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பதையும் அவர் விவரித்தார்.
சூர்யாவை அண்ணா என்று குறிப்பிட்டு அந்த மாணவி நெகிழ்ச்சியாகப் பேசியபோது, சூர்யாவும் மேடையிலேயே கண் கலங்கினார். பின்னர் மாணவியின் அருகே சென்று, தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் வகையில் அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார் சூர்யா.
இதன்மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு வகையில் பயன்பெற்று வருகின்றனர்.