7,000 திரையரங்குகளில் 'தர்பார்'

1 mins read
7bd1ca0a-6c2d-47b8-83bb-36773e499108
படத்தின் விளம்பரத்திற்காக சுமார் ரூ.8 கோடி வரை செலவு செய்துள்ளதாக லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கண்ணன் கூறியுள்ளார். படம்: இணையம் -

தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'தர்பார்'. ரஜினியின் 167வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் நாளை மறுநாள் (ஜனவரி 9) தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது தர்பார் பட விளம்பரப் பணிகளில் அதன் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 'தர்பார்' திரைப்படம் இந்தியாவில் 4,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று பரவும் செய்தியை வதந்தி என்று குறிப்பிட்ட லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கண்ணன், தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை வெளிவராத இடங்களிலும் தர்பார் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார். படத்தின் விளம்பரத்திற்காக சுமார் ரூ.8 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்