புது கார் வாங்கி மகிழ்ந்த நிதி அகர்வால்

புது கார் வாங்கி மகிழ்ந்த நிதி அகர்வால்

1 mins read
d64c27da-f706-4e40-b605-5ed6c2ccac7a
'பூமி' படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துவரும் நிதி அகர்வால், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். படம்: ஊடகம் -

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதுக் கார் வாங்கியுள்ளார் இளம் நாயகி நிதி அகர்வால்.

தற்போது தமிழில் உருவாகும் 'பூமி' படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துவரும் இவர், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். எனினும் இவர் நடித்த இரண்டு தெலுங்குப் படங்களும் தோல்வி கண்டன. இந்தியிலும் இவர் நடிப்பில் வெளியான 'மைக்கேல்' ஊற்றிக் கொண்டது.

இதனால் வாய்ப்புகள் குறைந்த நிலையில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் அண்மையில் நடித்த 'ஸ்மார்ட் சங்கர்' என்ற தெலுங்குப் படம் வசூலில் அசத்தியுள்ளது. இதையடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகமடைந்த நிதி, புதுக்கார் வாங்கியதுடன், அதை தாமே ஓட்டிச் செல்லும் காணொளிப் பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.