ஜீவா நடிப்பில் ஜனவரியில் 'ஜிப்ஸி', பிப்ரவரியில் 'சீறு'

ஜீவா நடிப்பில் ஜனவரியில் 'ஜிப்ஸி', பிப்ரவரியில் 'சீறு'

1 mins read
fe0109ef-66c2-43b0-8f13-dc52d234d204
-

ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள 'சீறு' வரும் பிப்ரவரியில் வெளியாகிறது. விஜய் சேதுபதியின் 'றெக்க' படத்தை இயக்கியவர் ரத்னசிவா. இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'சீறு' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜீவாவுடன் இணைந்து நடித்திருப்பவர் ரியா சுமன். டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கே வெளியாக வேண்டிய இப்படம் சில காரணங்களால் தாமதமானது. இந்நிலையில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வரும் 24ஆம் தேதி வெளியாவதால், பிப்ரவரி 7ஆம் தேதியன்று 'சீறு' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.