'தர்பார்' பார்க்க ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்த ரசிகர்

1 mins read
ec5546f6-8e59-43c1-89ef-bd18e80b7684
ரஜினியின் தீவிர ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஜப்பானில் இருந்து  சென்னைக்கு வந்துள்ளார் யுசுதா ஹிடதோஷி (நடுவில்). படம்: ஊடகம் -

'தர்பார்' படத்தை ரஜினியின் தீவிர ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் யுசுதா ஹிடதோஷி.

இவர் மட்டுமல்ல, ஜப்பானில் இருந்து பல ரசிகர்கள் ரஜினியின் புதுப்படங்கள் வெளியாகும் போது சென்னைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த முறை யுசுதா வந்துள்ளார்.

சென்னையில் உள்ள திரையரங்கத்தில் தனக்கான நுழைவுச் சீட்டையும் அவர் வாங்கியுள்ளார். இத்தகவலை திரையரங்கத்தின் நிர்வாக இயக்குநர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் யுசுதாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 'பேட்ட' படத்துக்காகவும் இதே போல் சென்னைக்கு வந்து சென்றாராம் யுசுதா. ரஜினி படத்தை அவரது தீவிர ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பது பன்மடங்கு உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்