வாய்ப்புக்காக காத்திருக்கும் சுவாதி

வாய்ப்புக்காக காத்திருக்கும் சுவாதி

1 mins read
2a27b233-efef-410a-8a1d-c2eac51aad34
திருமணத்துக்குப் பிறகு சற்றே உடல் எடை கூடிவிட்டதால், தீவிர உடற்பயிற்சி செய்து பழைய தோற்றத்துக்கு வந்துள்ளாராம். படம்: ஊடகம் -

சமூக வலைத்தளங்களில் தாம் வெளியிட்டுள்ள அண்மைய புகைப்படங்கள் தமக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகச் சொல்கிறார் 'சுப்ரமணியபுரம்' சுவாதி.

கடந்த ஆண்டு திடீரென தனது காதலரைத் திருமணம் செய்துகொண்டு அவருடன் இந்தோனீசியாவிற்குப் பறந்து விட்டார் சுவாதி. இப்போது புகுந்த வீட்டார் சம்மதத்துடன் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு சற்றே உடல் எடை கூடிவிட்டதால், தீவிர உடற்பயிற்சி செய்து பழைய தோற்றத்துக்கு வந்துள்ளாராம். இதையடுத்து புதிதாகப் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

"திருமணமானதால் எனது திறமை குறைந்துவிடப் போவதில்லை. தோற்றத்திலும் எந்தக் குறையும் கூற இயலாத அளவுக்கு மாறியுள்ளேன். எனவே எனக்குரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்," என்கிறார் சுவாதி.