'மூக்குத்தி அம்மன்' படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்துஜா.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குகின்றனர். அண்மையில் நாகர்கோவிலில் இப்படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கினர். இதில் இந்துஜாவும் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான 'எல்.கே.ஜி' பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, மீண்டும் ஒரு படத்தை இயக்குமாறு கேட்டு அவரை ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ்.
இந்நிலையில் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்ததாகச் சொல்கிறார் இந்துஜா.
"நயன்தாரா மேடம் நாயகியாக நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. கௌரவ வேடம் என்றாலும், கதையின் முக்கிய திருப்பத்துக்கு நான்தான் காரணமாக இருப்பேன். இது அருமையான படமாக உருவாகிறது," என்கிறார் இந்துஜா.

