நடிகையாக இருந்தாலும் நானும் ஒரு பெண்தான். புகைப்படங்கள் எடுப்பதுடன் அதை வெளியிடுவதிலும் தனக்கு அலாதி ஆசை உள்ளதாகக் கூறுகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார்.
மாளவிகா நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதவிதமாக படம்பிடித்து அதை சமூக வலைத் தளத்தில் பதிவிடுவார். இப்போதும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளவர் இதுகுறித்து கூறுகையில், "புகைப்படங்கள் எடுப்பதும் அவற்றை வெளியிடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தாலும் புகைப்படங்கள் எடுப்பதை விடாது நான் தொடர்ந்து வருகிறேன்.
"பளிச் பளிச் என்று பாயும் கேமரா வெளிச்சம் பலருக்கும் பிடித்த ஒன்று. இது கலைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அவ்வகையில் நடிகையாக இருந்தாலும் நானும் ஒரு பெண் தானே?" என்று கேட்கிறார் மாளவிகா.

