நடிகர் தனுஷ் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'கர்ணன்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக தனுஷ் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இந்தப் படத்தை 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி பிரபல மான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷின் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் லால், தனுஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் புதிய தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

