உலக மக்களால் புகழப்படும் நகைச்சுவை புயல் வடிவேலுவை போலிஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் தகவல்கள் பரவிய நிலையில், வடிவேலு இதனை மறுத்துள்ளார். "என்னைக் களங்கப்படுத்தவும் என் எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் எங்கும் தலைமறைவாகவில்லை. கோவிலுக்குத்தான் சென்றிருந்தேன்," என்று கூறியுள்ளார். வடிவேலுவை வைத்து 'எலி' படத்தைத் தயாரித்த சதீஷ்குமார் கூறுகையில், "வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே நான் பட நிறுவனத்தைத் தொடங்கினேன். அவர் நடித்த 'எலி' படத்தினால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக இரு படங்களில் நடித்துத் தருவதாக வடிவேலு உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். வடிவேலுக்கு சம்பளப் பாக்கி இருப்பதாக அவரது உறவினர் கொலை மிரட்டல் விடுக்கிறார்," என்று மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடிவேல்: நான் ஓடிப்போகல்லையா; கோயிலுக்குத்தான்யா போனேன்
1 mins read
நகைச்சுவை புயல் வடிவேலுவை போலிஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் தகவல்கள் பரவிய நிலையில், வடிவேலு இதனை மறுத்துள்ளார். படம்: ஊடகம் -

