'டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டிலுமே சந்தானம்தான் நாயகன். ஜனவரி 31ஆம் தேதி இரு படங்களும் வெளியாவதாக அவற்றின் தயாரிப்புத் தரப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளிப் போடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். விஜய் ஆனந்த் இயக்கியுள்ள 'டகால்டி' படத்தை சந்தானமும் எஸ்.பி. சௌத்ரியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தை கென்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பட வேலைகள் எப்போதோ முடிந்துவிட்ட போதிலும் பணப் பிரச்்சினையால் பட வெளியீடு இதுநாள் வரை தாமதமாகி வந்தது. படம்: ஊடகம்

