அறிமுகமான புதிதில் குஷ்புவைப் போல் சற்றே பருமனாக வலம் வந்த ராஷி கண்ணா திடீரென இளைத்துக் காணப்படுகிறார்.
உயரத்துக்கேற்ற பருமன் இருப்பதுதான் நல்லது என்று நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியதால் உடல் எடையைக் குறைத்து, இளைத்ததாகக் கூறுகிறார்.
"நாம் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் நமது உடலும் ஒத்துழைக்கவேண்டும். இதைக் கவனத்தில்கொண்டே சில வாரங் களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் பருமனைக் குறைத்தேன்.
"இந்தத் தோற்றமும் எனக்கு நன்றாக இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர்," என்று சொல்லும் ராஷி கண்ணா, தற்போது தமிழில் ஒன்று, தெலுங்கில் இரண்டு என மொத்தம் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறுவதில்லை எனச் சிலர் தகவல் பரப்பி வருவதாகச் சொல்பவர், அது உண்மையாக இருந்தால் எப்படித் தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கேட்கிறார்.
"இதுபோன்ற வதந்திகள், கிசுகிசுக்களை தாம் அறவே கண்டு கொள்வதில்லை," என்கிறார் ராஷி.

