பரபரப்பை ஏற்படுத்திய ‘லாபம்’ முதல் தோற்ற சுவரொட்டி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஷ்ருதிஹாசனும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இமான் இசையமைக்கிறார். முதல் தோற்றச் சுவரொட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டியை வெளியிட்ட பின்னர் பேசிய ஜனநாதன், “இங்கு சுட்டவர்களும் குடிமக்கள்தான்; சுடப்பட்டவர்களும் குடிமக்கள்தான்,” என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வாசகத்துடன் ‘லாபம்’ சுவரொட்டியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.