மிரள வைக்கும் ‘மிருகா’ முன்னோட்டம்

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘மிருகா’ விரைவில் வெளியீடுகாண உள்ளது. இதில் ராய் லக்‌ஷ்மி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இப்படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு வெளியானது. நடிகர் விஜய் ஆன்டணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முன்னோட்டத் தொகுப்பை வெளியிட்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தார். கோத்தகிரி மலைப்பகுதிக்குள் இருந்து அட்டகாசம் செய்கிறது ஒரு காட்டுப் புலி. அதனால் ஏற்படும் விளைவுகளும், சில மர்மச் சம்பவங்களும்தான் படத்தின் கதையாம். இந்தப் படம் வெளியான பிறகு தமிழில் மீண்டும் தம்மால் ஒரு வெற்றிவலம் வரமுடியும் என்கிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார்.