ரைசா: வயது ஒரு தடையல்ல

நடிகைகள் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்கிறார் ‘பிக்பாஸ்’ புகழ் ரைசா வில்சன். 

டேட்டிங் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்றும் கூறுகிறார். 

அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார் ரைசா. அப்போது ரசிகர் ஒருவர், ரைசாவை விட ஏழு வயது குறைந்தவருடன் டேட்டிங் செல்ல முடியுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ரைசா, “ஏன் நீங்கள் என்னைவிட ஏழு வயது குறைந்தவரா? டேட்டிங் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார்,” என்றார்.