‘பெண்களைக் குற்றம் சுமத்தாதீர்’

கருச்சிதைவுக்கு ஆளானவர்களை ஒதுக்கி வைப்பது மிகவும் தவறு என்கிறார் நடிகை காஜோல். 

கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒரு நிகழ்வுதான் என்றும், இதற்காகப் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

“எனக்கு இரண்டு  முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டேன். தாங்க முடியாத வலியை அனுபவித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன். 

“இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆளானவர்களை ஒதுக்கி வைத்துத் தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அவர்களை அசிங்கப்படுத்தி அவமானமாக உணரவைக்கிறார்கள். 

“இந்த நிலை மாறவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது குடும்பத்தார் உட்கார்ந்து பேசுவதுடன், ஆறுதலாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்,” என்றும் வலியுறுத்தியுள்ளார் காஜோல்.