நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் திரைப்படமாகிறது

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலை மையமாக வைத்து உருவாகி வருகிறது ‘நானும் சிங்கிள்தான்’.

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் இது.

டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி.

தினேஷ், தீப்தி ஜோடியாக நடித்துள்ளனர். நயன்தாராவைப் போல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நாயகன் விரும்புவாராம். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணை அவர் சந்திக்க நேர்கிறது.

“அதன்பிறகு காதல் பைத்தியமாக அந்த நாயகன் சுற்றித் திரிகிறான். இருவருக்கும் இடையே நயன், விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும். பிப்ரவரியில் படம் வெளியாகும்போது நயன்தாராவின் நிஜக் காதலை நாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம் என்பது புரியும்.

“இந்தப் படத்தை இளையர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் பார்க்கலாம். அந்தளவிற்குப் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன,” என்கிறார் இயக்குநர் கோபி.
 

#நயன் #விக்னேஷ்சிவன் #தமிழ்முரசு #நானும்சிங்கிள்தான்