இரட்டை வேடங்களில் யோகிபாபு

இரட்டை வேடங்களில் யோகிபாபு

1 mins read
d3ea94de-63d6-4476-b659-99ba34461042
'டக்கர்' படத்தில் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளாராம் யோகிபாபு. படம்: ஊடகம் -

கார்த்திக் ஜி கிருஷ் இயக்கத்தில் உருவாகும் படம் 'டக்கர்'. சித்தார்த், திவ்யான்ஷா, கௌசிக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளாராம் யோகிபாபு. "அளவுக்கு அதிகமாக கோபப்படும் இரு நபர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட இருவரது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை விவரிக்கும் கதை இது. யோகிபாபு திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் திரை யரங்கை அதிர வைக்கும். அவர் படத்துக்குக் கூடுதல் வசீகரத்தை ஏற்படுத்தி உள்ளார்," என்கிறார் இயக்குநர்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன், ஜெயனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.