சுடச் சுடச் செய்திகள்

இந்திப் படத்திலிருந்து நீக்கப்பட்ட கீர்த்தி

இந்திப் படத்தில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் திடீரென அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை நீக்கியதற்கான காரணத்தைப் படத்தின் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. 

அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் ‘மைதான்’ படத்திற்குதான் கீர்த்தியை ஒப்பந்தம் செய்திருந்தனர். அஜய்க்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம் கீர்த்தி. 

கதை சொன்னபோது தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் பின்னர் தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகி விட்டார். இதனால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் தோற்றம் அவரிடம் காணப்படவில்லையாம்.

“சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். எனினும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கீர்த்தியின் உடல்வாகு பொருந்தவில்லை. எனவேதான், அவரை நீக்க வேண்டியதாயிற்று,” என படக்குழு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கீர்த்திக்குப் பதிலாக பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon