'நான் சிரித்தால்' படத்தில் ஹிப்ஹாப் ஆதி

1 mins read
b87a68f6-750c-4758-8ad1-9f0f45194c8c
'நான் சிரித்தால்' பிடத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன். படம்: ஊடகம் -

இராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் 'நான் சிரித்தால்'. சுந்தர்.சி தயாரிக்க, ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். இது முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகிறதாம். ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.

இந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், படத்தின் நாயகனான ஆதிக்கு சிரிக்கும் நோய் இருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.