ஒரே நாளில் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை

ஒரே நாளில் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை

1 mins read
a0936c1c-1201-4a5f-a1a2-2343e2761ccd
சந்தானத்தின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதைத் தவிர்க்க தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. -

சந்தானத்தின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதைத் தவிர்க்க தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 18 ரீல்ஸ் நிறுவனம் தங்களது தயாரிப்பில் சந்தானம் நடித்த 'டகால்டி' ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் தங்க ளுடைய தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படமும் ஜனவரி 31ஆம் தேதி வெளியீடு என்று அறிவித்து உள்ளது. தற்போது இரண்டு படங்களையும் போட்டிபோட்டுக் கொண்டு, விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இரண்டு படங்களின் தயாரிப்பாளர்க ளையும் அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் இரண்டு தயாரிப்பாளர்களுமே எங்களுக்கு இந்தத் தேதியை விட்டால் வேறு தேதி கிடைக்காது என்று தெரி வித்துவிட்டார்கள். எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. மீண்டும் ஒரு வாரம் கழித்து வந்து பேசுவதாகச் சொல்லிச் சென்ற தயாரிப்பாளர்கள் இருவரும் திரும்பி வரவே இல்லை. எனவே இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.