ஜனவரி 31ஆம் தேதி வெளியாகிறது ‘நாடோடிகள் 2’

சசிகுமார், அஞ்சலி நடித்துள்ள படம் ‘நாடோடிகள் 2’. கடந்த 2009ல் வெளியான ‘நாடோடிகள்’ முதல் பாகத்தை சமுத்திரகனி இயக்கியிருந்தார். அதில் சசிகுமார், அனன்யா, பரணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அது பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் சசிகுமார், சமுத்திரகனி கூட்டணியில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

இதில் அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முன்பே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் சில பிரச்சினைகளால் தாமதமானது. இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next