பாரதிராஜா நடிக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

நடிகராகவும் திரையுலகில் முத்திரைப் பதிக்கவேண்டும் என்று பாரதிராஜா தீர்மானித்துவிட்டார் போலும். அற்புதமான படைப்புகளைத் தந்த அவர், உண்மையில் நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா எழுதி நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. உணர்வுபூர்வமான ஒரு கதையைக் களமாகக்கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

“எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் அவற்றை நேர்மறையான சிந்தனையுடன் எதிர்கொண்டு போராடி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தன்முனைப்புத் திரைப்படமாக இதை உருவாக்கி உள்ளேன்.

“மேலும் சுயமனித ஒரு மைப்பாட்டை அழுத்தமாகப் பதிவு செய்யும் கதைக்களத்தைக் கருவாகக்கொண்ட படைப்பாகவும் இது அமைந்துள்ளது.

“அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும் ஓர் இளம்பெண்ணும் தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும்போது, அச்சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டு போராடி வெற்றிகொள்கிறார்கள் என்பதுதான் ’மீண்டும் ஒரு மரியாதை’” என்கிறார் பாரதிராஜா.

இதைத் தனக்கே உரிய ஆழ்ந்த சிந்தனையுடனும், தனித்துவத்துடனும் திரையில் காண்பித்திருக்கிறார். இதில் அவருக்கு இணையாக ராசி நட்சத்திராவும் முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமகேந்திரா, ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி வசனம் எழுத, வைரமுத்து, கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோரின் பாடல்களுக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

எதிர்வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இப்படம் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!