'பன்னிகுட்டி' முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியானது

'பன்னிகுட்டி' முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியானது

1 mins read
c126d5b7-c3a5-4d15-8968-e05aedd0c9e0
விரைவில் வெளியீடு காணவிருக்கும் 'பன்னிக்குட்டி' படத்தில் யோகிபாபுவும் கருணாகரனும் நகைச்சுவையில் அசத்தி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம் -

யோகிபாபு நாயகனாக நடிக்கும் 'பன்னிகுட்டி' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர் மாதவன் வெளியிட்டார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனுசரண் முருகையன் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது தொழில் நுட்பப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. வழக்கம்போல் யோகிபாபுவும் கருணாகரனும் நகைச்சுவையில் அசத்தி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.