'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாசும் அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
நல்ல கதை அமைந்தால் இணைந்து நடிப்போம் என்று இருவரும் கூறிவந்த நிலையில், அனுஷ்காவுடன் ஜோடி சேர பிரபாஸ் மறுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'சாஹோ' படத்திற்குப் பிறகு ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்நிலையில் பூஜாவுக்கு முன்னதாக அனுஷ்காவைத்தான் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தாராம் ராதாகிருஷ்ணகுமார். ஆனால் பிரபாஸ், அனுஷ்காவை இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் பரவியதால் அனுஷ்காவுக்குப் பதில் வேறு நடிகையை தேர்வு செய்யும்படி பிரபாஸ் கேட்டுக்கொண்டாராம்.
இதையடுத்தே பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தத் தகவல் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

