பழம்பெரும் நடிகர் டி.எஸ். ராகவேந்திரா காலமானார். அவருக்கு வயது 75.
'சிந்து பைரவி', 'விக்ரம்', 'சொல்லத் துடிக்குது மனசு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராகவேந்திராவின் இயற்பெயர் விஜய் ரமணி.
கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'யாகசாலை' என்ற படத்துக்கு இசையமைத்தும் உள்ளார். அவர் சிறந்த பாடகரும் ஆவார்.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ராகவேந்திரா நேற்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.
ராகவேந்திரா மறைவுக்கு தமிழ்த் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

