'ஞானச்செருக்கு' படத்தைக் காணும் பாக்கியம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என நடிகை வசுந்தரா கூறியுள்ளார்.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், குறைந்த செலவில் தயாராகும் படங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அதனால் வணிக ரீதியில் அவை வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் தரணி ராஜேந்திரன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை கேள்விப்பட்டேன். இதுபோன்ற படங்களை வெறும் விருது படமாகவே நாம் பார்க்கிறோமே தவிர, அதற்கான வணிக வெற்றி என்பது கிடைப்பது இல்லை," என்றார் வசுந்தரா. ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

