திருமணம் குறித்து புது வதந்தி: யோகி வேண்டுகோள்

திருமணம் குறித்து புது வதந்தி: யோகி வேண்டுகோள்

1 mins read
d2f3889c-9dfa-47d8-8203-c40fec71906b
தனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று ஊடகங்கள் மூலம் யோகிபாபு கேட்டுக் கொண்டுள்ளார். -

இப்போதெல்லாம் முன்னணி நாயகிகளுக்கு இணையாக யோகிபாபு குறித்தும் ஊடகங்களில் தினம் ஒரு செய்தி வெளியாகிறது.

அவற்றுள் பெரும்பாலும் அவரது திருமணம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன.

இந்நிலையில் அவருக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பும் ஒரு செய்தி வெளியானது.

ஆனால், இதுவும் பொய்த் தகவல் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் யோகிபாபு.

மணப்பெண்ணின் பெயரையும் சேர்த்து செய்தி வெளியானதால் பலரும் அதை உண்மை என்று நம்பிவிட்டனர்.

இந்நிலையில் தானே நேரடியாக ஊடகங்கள் முன் தோன்றி ஏதும் சொல்லாதவரை தனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று ஊடகங்கள் மூலம் யோகிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.