'பிக்பாஸ்' மூலம் பிரபலமான நடிகர் மகத், தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிக்பாஸில் பங்கேற்பதற்கு முன்பே துபாயில் வசிக்கும் தொழிலதிபர் பிராச்சி மிஸ்ராவைக் காதலித்து வந்தார் மகத். எனினும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருக்கும் நடிகை யாஷிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதனால் தன் காதலி பிராச்சியைப் பிரிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததுடன், விரைவில் திருமணம் செய்துகொள்வது என திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மகத்-பிராச்சி திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர தங்குவிடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்களும் நெருக்கமான நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் மகத்.

