ஏற்கெனவே பட வாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் அனுஷ்கா, ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கவலையில் மூழ்கியுள்ளாராம்.
விசாகப்பட்டினத்தில் ஏராள மான நிலங்களை வாங்கிப் போட்டிருந்தாராம் அனுஷ்கா. இந்நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி உருவாகும் என்று ஒருசிலர் கிளப்பிவிட, விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை உயராது என்று முடிவு செய்திருக்கிறார்.
மேலும் அவற்றின் சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலைக்கு விற்று விட்டாராம். இப்போது அந்தப் பகுதியில் உள்ள நிலங்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஹைதராபாத்தில் இருந்த ஒரு வீட்டையும் சரிபாதி விலைக்கு விற்று நஷ்டமடைந்திருக்கிறார்.
இதனால் தனக்கு முதலீடு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கிய சிலரை நட்பு வட்டத்திலிருந்து ஒதுக்கிவிட்டாராம்.

