விஜய்யை கண்டு பயந்த ஐஸ்வர்யா

விஜய்யை கண்டு பயந்த ஐஸ்வர்யா

1 mins read
becbf6c6-c820-483a-afdc-428e8e283eaf
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மிக அற்புதமான நடிகர் என்று பாராட்டியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். படம்: ஊடகம் -

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மிக அற்புதமான நடிகர் என்று பாராட்டியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழில் இவர் நடித்த கனாவைத் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்துள்ளனர். தெலுங்கிலும் ஐஸ்வர்யாவே நடித்த நிலையில் படத்துக்கு நல்ல வரவேற்பாம். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' என்ற படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா.

"இந்தப் படத்தில் நான் உட்பட வேறு சிலரும் நடித்துள்ளோம். ஆனால், விஜய் தான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறார். அவர் நிஜத்தில் மிக நல்லவராகவும் நேர்மையானவராகவும் இருக்கிறார். எனினும் அவர் தொடர்பான ஒருவித அச்ச உணர்வு மனதில் இருப்பதை தொடக்கத்தில் உணர்ந்தேன். அவருடன் நடித்த பிறகு அவரது எளிமையைக் கண்டு என் மனம் முற்றிலும் மாறிவிட்டது," என்றார் ஐஸ்வர்யா.