'சைக்கோ' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிஷ்கினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் உதயநிதி. நேற்று முன்தினம் படத்தின் வெற்றியை இப்படக் குழுவினர் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, கடைசியாக தாம் நடித்த நான்கு படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை என வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.
'இப்படை வெல்லும்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'நிமிர்' மற்றும் 'கண்ணே கலைமானே' ஆகியவை சரியாக போகவில்லை. ஆனால் எதுவும் மோசமான படமல்ல.
"இந்த விழாவுக்கு 3 முக்கிய நபர்களான இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அதிதி ராவ் வரவில்லை. அவர்களின் பங்களிப்புக்கு நன்றி. 'சைக்கோ'வில் எனக்கு அதிதி ராவ்தான் ஜோடி. ஆனால், எனக்கும் அவருக்கும் 2 நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. அப்படியொரு காதல் கதை இது.
"கண்டிப்பாக 'சைக்கோ 2' உருவாகும் என நம்புகிறேன்," என்றார் உதயநிதி.

