நடிகர் யோகி பாபு திடீர் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று(பிப்ரவரி 5) காலை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.
அவரது குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
யோகி பாபுவுக்கு திருமணம் என்று கடந்த ஓராண்டாக பல்வேறு செய்திகள் வெளியாகின. அவற்றை எல்லாம் மறுத்து வந்தார்.
அண்மையில் மஞ்சு பார்கவி என்று மணப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான தகவலையும் கூட மறுத்தார் யோகி.
மஞ்சு பார்கவி அவரது உறவுக்காரப் பெண்தான் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவரைப் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை.
என்னுடைய திருமணம் பற்றிய செய்தியை நானே அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதுபோலவே, தனது டுவிட்டர் பதிவில் மணக்கோலத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருமணச் செய்தியைதத் தெரிவித்துள்ளார் யோகி பாபு.
பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். நாமும் அவரை வாழ்த்துவோம்!
#தமிழ்முரசு
#யோகிபாபு

