இரு படங்களில் லாஸ்லியா

இரு படங்களில் லாஸ்லியா

1 mins read
b3b26e05-b7ff-4d85-8865-8e47a14976c0
இந்திய  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக அறிமுகமாகும் 'ப்ரண்ட்ஷிப்' லாஸ்லியாதான் அவரது ஜோடி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படம்: ஊடகம் -

'பிக்பாஸ்' பிரபலங்களில் வீண் சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பவர் லாஸ்லியாதான்.

அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு கோடம்பாக்கத்தில் இவர் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லாஸ்லியா இரு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக அறிமுகமாகும் 'ப்ரண்ட்ஷிப்' லாஸ்லியாதான் அவரது ஜோடி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதேபோல் 'நெடுஞ்சாலை' பட நாயகனாக ஆரி நடிக்கும் புதுப்படத்திலும் லாஸ்லியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் மற்றொரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்க உள்ளார்.