தாம் நாயகனாக நடித்துள்ள 'மாயநதி' திரைப்படத்தை பரவை முனியம்மாவுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார் அபி சரவணன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரை மருத்துவமனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை கவனித்து கொண்டார் அபி.
இந்நிலையில் இவரும் வெண்பாவும் ஜோடி சேர்ந்து நடித்த 'மாயநதி' திரைப்படம் அண்மையில் வெளியானது.
இதைக் கேள்விப்பட்ட பரவை முனியம்மா அப்படத்தை பார்க்க விரும்பியுள்ளார்.
இதையடுத்து அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார் முனியம்மா.
"நீண்ட நாட்கள் கழித்து திரையரங்கில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அபி சரவணன் நடிப்பு யதார்த்தமாக இருந்தது என்றும் பாராட்டினார்.


