போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனாவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெங்களூரு நகர சாலையில் சொகுசுக் காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா, வாகனத்தை ஓட்டியபடியே செல்ஃபி படமெடுத்துள்ளார்.
இந்தக் காட்சியை யாரோ ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போக சஞ்சனாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்குப் போலிசார் நோட்டீஸ் அனுப்பினர்.
அச்சமயம் துபாயில் இருந்த அவர் நாடு திரும்பியதும் பெங்களூரு போக்குவரத்து இணை ஆணையரை நேரில் சந்தித்து விதிகளை மீறியதற்காக மன்னிப்புக் கோரி 2 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் செலுத்தியுள்ளார்.

