எதிர்பாராத சில சூழ்நிலைகள் காரணமாக தனது திருமணத்தை அவசர கதியில் நடத்த வேண்டி இருந்ததாக சொல்கிறார் யோகிபாபு.
யாரையும் முறைப்படி அழைக்காவிட்டாலும் பலர் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தது நெகிழ வைத்ததாகவும் கூறுகிறார்.
"எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் நான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதனால் யாருக்கும் முறைப்படி அழைத்து வாழ்த்துக்களைப் பெற முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது.
"திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும் கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம்.
"ஆனாலும், தொலைபேசியில் அழைத்து, சமூக வலைதளங்களிலும் படத்தை வெளியிட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
"மார்ச் மாதம் என் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் முறைப்படி அழைப்பேன்," என்று நெகிழ்கிறார் யோகி பாபு.
#தமிழ்முரசு #யோகிபாபு #திருமணம் #மஞ்சுபார்கவி


