தனது திருமண முறிவுகள் குறித்து அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார் நடிகை மீரா வாசுதேவன்.
'அறிவுமணி', 'அடங்கமறு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரின் மகனைக் காதலித்து மணந்தார். ஐந்தாண்டுகளில் கருத்து வேறுபாடால் அவரைப் பிரிந்த மீரா, பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மணந்தார். ஆனால், இந்தத் திருமணமும் நீடிக்கவில்லை. தற்போது அரிஹரா என்ற மகனுடன் வாழ்ந்து வருபவர், திருமணம் விவாகரத்தில் முடிந்தால் பெண்கள் மீது மட்டுமே சமூகம் குறை கூறுவதாக ஆதங்கப்படுகிறார்.
"பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. என் முதல் கணவரிடம் மன, உடல் ரீதியாக நான் பல சித்திரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது. அதேபோல் 2வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால்தான் பிரிய நேரிட்டது," என்கிறார் மீரா.

