தமிழில் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகை சிருஷ்டி டாங்கே. அடுத்து ஆரியுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்துள்ள 'கட்டில்' படம் விரைவில் திரை காண உள்ளது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் தமிழ்க் கலாசாரத்தை முழுமையாகப் புரிந்து கொண்டாராம்.
"தமிழ்க் கலாசாரம் தொடர்பாக பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இதனால் தமிழ்க் கலாசாரத்தின் மீதான எனது காதல் மேலும் அதிகரித்துள்ளது.
"எனவே ஒரு தமிழரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதன்மூலம் தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்ற முடியும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களும் மிக அன்பானவர்கள். திரையுலகத்திற்குப் பெரும் ஆதரவை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி," என்கிறார் சிருஷ்டி டாங்கே.